Advertisement

கொரோனா எதிர்த்து போராட உதவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உதவ 200 மில்லியன் யூரோக்களை இந்தியாவுக்கு வழங்க இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. சமூக நல அமைப்புகளை உயர்த்தவும், இந்தியாவில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும் பிரான்ஸ் 200 மில்லியன் யூரோக்களை வரை நிதி உதவி அளிக்கிறது என அந்நாட்டு தூதர் இம்மானுவேல் லெனெய்ன் தெரிவித்துள்ளார். ஏஜென்ஸ் ஃபிராங்காயிஸ் டி டெவலப்மெண்ட் ஆலோசனைக் குழு இந்த நிதியை ஒதுக்கியுள்ளது. வரும் வாரங்களில் இந்தியாவின் நிதி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட ஏஜென்ஸ் ஃபிராங்காயிஸ் டி டெவலப்மெண்ட் 115 நாடுகளின் காலநிலை, பல்லுயிர், கல்வி மற்றும் நகர்புற வளர்ச்சி மற்றும் சுகாதாரம் தொடர்பாக திட்டங்களை கவனத்து வருகிறது. மார்ச் 31ம் தேதி பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உடன் நடந்த தொலைபேசி உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி நிதி உதவி குறித்து விவாதித்திருக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement