Advertisement

மத்திய அரசுக்கு நிபுணர் அட்வைஸ்

கஷ்டப்படும் மக்கள் கையில் காசு கிடைக்க வழி செய்தால் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து இந்தியா மீள முடியும் என்று நோபல் விருது பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி சொல்கிறார். காங்கிரஸ் எம்.பி ராகுலுக்கு அளித்த பேட்டியில் மேலும் சொல்வதை கேளுங்கள்: அதிகாரத்தில் இருப்பவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், எல்லா விஷயத்திலும் அவர் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என சொல்லிவிட முடியாது. உதாரணமாக அமெரிக்காவையும் பிரேசிலையும் பாருங்கள். 'எல்லாம் எனக்கு தெரியும்; எல்லா பிரச்னைகளுக்கும் என்னால் தீர்வு காண முடியும்' என்று அதன் அதிபர் காட்டிக் கொள்கிறார். ஆனால், கொரோனா விஷயத்தில் அவர்களின் பேச்சும் செயலும் காமெடியாகி விட்டது. ஊரடங்கு முடிந்த பின் பொருளாதாரத்தை மீட்க வேண்டுமா? அமெரிக்கா, பிரேசிலை பார்க்காதே. ஜப்பானை பாருங்கள். சில ஐரோப்பிய நாடுகளை பாருங்கள். அந்த அரசுகளை போல திட்டங்களை இந்திய அரசும் அறிவிக்க வேண்டும். அந்த நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10 சதவீதத்தை பொருளாதார ஊக்கத்துக்காக ஒதுக்கி உள்ளன. நமது அரசு 1 சதவீதம் ஒதுக்கவே யோசிக்கிறது. இந்த நேரத்தில் அரசாங்கம் மட்டும்தான் செலவு செய்ய முடியும். வேறு யாரிடமும் துட்டு இல்லை. ஆகவே மத்திய அரசே பணத்தை அள்ளி விட வேண்டும். ”சிறு, குறு, நடு தொழில்களுக்கு சலுகை அளித்துள்ளோம்; நிதி கொடுத்துள்ளோம்” என்று சொன்னால் போதாது. மக்கள் தொகையில் 60 சதவீதம் ஏழைகள். அவர்கள் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கையில் சுத்தமாக காசு இல்லை. அவர்களுக்கு இப்போது பணம்தான் மருந்து. அதை கொடுக்க வேண்டும். அப்போதுதான் கடைக்கு போய் பொருள் வாங்குவார்கள். அதனால் பொருளாதாரம் வேகம் எடுக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement