Advertisement

பால், பழத்துக்கு மாறிய சரக்கு ரயில்கள்

ஊரடங்கால் மார்ச் 22 முதல் பயணிகள் ரயில் ஓடவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தாலும் சத்தமின்றி பல நல்ல காரியங்களை ரயில்வே செய்து வருகிறது. ராஜஸ்தானிலிருந்து ஒட்டகப்பாலை மும்பையிலுள்ள ஆட்டிசம் குழந்தைக்கு சரக்கு ரயில் கொண்டு வந்து கொடுத்தது நாடு முழுக்க நன்கறியப்பட்ட செய்தி. இதுபோன்ற அவசரத் தேவைகளுக்காக சேது என்ற 24இண்ட்7 ெஹல்ப்லைன் வசதியை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. போன்: +91-9025342449 (தெற்கு ரயில்வே) இதன்மூலம் அத்தியவாசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்ல ரயில்வே உதவியை யாரும் நாடலாம். சிதம்பரத்தைச் சேர்ந்த வடிவேலு, சேது ெஹல்ப்லைனை அணுகினார். கேன்சர் நோயால் அவதிப்படும் உறவினருக்கு மருந்து மாத்திரை இல்லை எனசொன்னதுமே ரயில்வே அவருக்கு உதவிக்கரம் நீட்டியது. சென்னையிலிருக்கும் வடிவேலுவின் நண்பர் கேன்சர் மருந்து மாத்திரைகளை வாங்கி எழும்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து கொடுத்தார். சென்னை டூ சிதம்பரத்துக்கு நேரடி சரக்கு ரயில் இல்லை. நாகர்கோயில் செல்லும் சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டது. திருச்சியில் மருந்து பார்சல் இறக்கப்பட்டது. அங்கிருந்து சிதம்பரம் சென்ற சரக்கு ரயிலில் பார்சல் ஏற்றி அனுப்பப்பட்டது. சிதம்பரத்தில் கார்டிடம் மருந்து பார்சலை பெற்ற வடிவேலு ரயில்வேக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என நெகிழ்ந்தார். இப்படி, மருத்துவ ரீதியாக சிக்கலான நிலையில் இருக்கும் பல நோயாளிகளுக்கு ஊரடங்கின்போது ரயில்வே உதவி வருகிறது. உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை கொண்டது இந்திய ரயில்வே-. 7,000 ரயில் நிலையங்கள், 12 லட்சம் பணியாளர்கள். இவ்வளவு பெரிய கட்டமைப்பை கொரோனா ஒழிப்பு பணிகளுக்காக பயன்படுத்த ரயில்வே தீர்மானித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement