Advertisement

சீனாவில் இருந்து உ.பி வர சில்க் ரூட் திறக்கிறது

அமெரிக்கா சீனா இடையோன வர்த்தகப்போரை கொரோனா வைரஸ் உச்சத்துக்கு கொண்டுபோய் விட்டது. சீனாவில் இருந்து வெளியேற அமெரிக்க நிறுவனங்கள் தயாராகிவிட்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை யோகி அரசு எடுக்கத் துவங்கி விட்டது. சீனாவிலிருந்து வெளியேறி 100க்கு மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் தொழிற்சாலைகளை துவங்க ஆர்வத்துடன் உள்ளன. அந்த நிறுவன பிரதிநிதிகளுடன் உத்தரப்பிரதேச சிறுகுறு தொழில்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினார். லாக்ஹீட் மார்ட்டின், அடோப், ஹனிவெல், பாஸ்டன் சயின்டிபிக், சிஸ்கோ சிஸ்டம்ஸ், ஃபெட்எக்ஸ், யுபிஎஸ், மாஸ்டர்கார்ட் போன்றவை கான்பரன்சிங்கில் பங்கேற்ற முக்கிய கம்பெனிகள் ஆகும். FedEx, UPS, Cisco, Adobe, Lockheed Martin, Honeywell, Boston Scientific உபி.யில் தொழில் துவங்கினால் எங்களுக்கு என்னென்ன சலுகைகள் அளிப்பீர்கள்? என பல கம்பெனிகள் கேட்டன. ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப -சலுகைகளை வழங்குவோம் என அமைச்சர் சித்தார்த் நாத் பதிலளித்தார். உத்தரப்பிரதேசத்தில் 90 லட்சம் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன; திறமையான பணியாளர்கள் உள்ளனர்; சாலை, தண்ணீர், 24 மணிநேர மின்சாரம் என தேவையான எல்லா வசதிகளும் உள்ளன. ஆலை துவங்க மானிய விலையில் நிலமும் ஒதுக்கித் தருவோம்; ஒப்புதல்களை உடனுக்குடன் வழங்குவோம் என அமைச்சர் சித்தார்த் நாத் உறுதியளித்தார். பாஸ்டன் நிறுவனம் மருத்துவ உபகரண ஆலை துவங்க திட்டமிட்டிருப்பதாக கூறியது. ஜீவர் விமான நிலைய திட்டத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக யு.பி.எஸ்., UPS ப்ரெடிக்ஸ் fredix கூறின. உ.பி. முழுவதும் மளிகை கடைகளில் டிஜிட்டல் பேமென்ட் வசதியை செய்துதர மாஸ்டர் கார்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement