Advertisement

இதுவரை 90 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவு, கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாகிவிட்டது. பல வியாபாரிகளிடமிருந்து பலருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து, சில்லரை வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மொத்த வியாபாரிகள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டால் சென்னையைச் சேர்ந்த 50க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு வந்து விட்டு லாரிகளில் ஊர் திரும்பிய வியாபாரிகள், தொழிலாளர்களால் வெளிமாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் 19 பேர் கடலூரில் 9 பேர், காஞ்சிபுரத்தில் 7பேர் விழுப்புரத்தில் 2 பேர் பெரம்பலூரில் ஒருவர் என பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90ஐ தாண்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement