Advertisement

உண்மையான ஹீரோக்கள் என முதல்வர் பாராட்டு

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் லால்ரெம்சங்கா வயது 28 சென்னையில் உள்ள ஓட்டல் மேலாண்மை கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு இங்கேயே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஏப்ரல் 26ம்தேதி அவர் மாரடைப்பால் இறந்தார். சென்னையில் உடலை அடக்கம் செய்வதற்கு சிக்கல் ஏற்பட்டதால் விவியன் உடலுடன் மிசோரமுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. சின்னதம்பி, ஜெயந்திரன் என்ற இரு டிரைவர்கள் மாறி மாறி ஆம்புலன்சை ஓட்டினர். 3 நாள் பயணத்துக்குப் பின் ஆம்புலன்ஸ் ஐஸ்வாலை அடைந்ததும் மிசோரம் மக்கள் தெருவின் இருபுறமும் நின்று டிரைவர்களை கைத்தட்டி வாழ்த்தி வரவேற்றனர். கிட்டத்தட்ட 3,500 கிலோ மீட்டர் தூரம் ஓய்வெடுக்காமல் ஓட்டி வந்த டிரைவர்களை உண்மையான ஹீரோக்கள் என முதல்வர் சொரம்தங்கா ட்விட்டரில் புகழ்ந்தார். இருவருக்கும் மிசோரம் மக்கள் வணக்கம் செலுத்துவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். ஆம்புலன்ஸ் தொகையுடன் ஜெயந்திரன், சின்னதம்பிக்கு தலா 2-,000 ரூபாய் ரொக்கப்பரிசையும், மிசோ பாரம்பரிய உடைகளையும் மிசோரம் அமைச்சர் பெய்க்குவா வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement