Advertisement

அரசியலை புரட்டி போடும் கொரோனா

கொரோனா பாதிப்பு அவ்வளவு சீக்கிரம் நீங்குவதாகத் தெரியவில்லை. செப்டம்பர் மாதம் வரை செல்லும் என கணக்கிடப்பட்டு, அதுவரை கல்லூரிகள் இயங்கத் தேவையில்லை என, பல்கலைக் கழக மானியக் குழு, பல்கலைக் கழகங்களை அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோலவே, மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான தியேட்டர்கள், மால்கள் ஆகியவையும், இவ்வருட இறுதி வரை இயங்க வாய்ப்பே இல்லை என மத்திய அரசிடம் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதனால், பொழுதுபோக்கு துறையான சினிமாத் துறையில், படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதைத் தவிர்த்து, வேறு தளங்களில் படங்களை வெளியிட முடிவெடுத்துச் சென்று விட்டனர். இப்படி செப்டம்பர் வரையில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருக்குமானால், கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக இல்லாமல் போவதற்கு, இந்த ஆண்டு இறுதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்தாண்டு நடக்க வேண்டிய சட்டசபைத் தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும், தள்ளிப் போடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசியல்வாதிகள் தரப்பிலும், அரசு அதிகாரிகள் தரப்பிலும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement