Advertisement

ட்ரம்ப் எடுத்தது சரியான நடவடிக்கை | WH0

கொரோனா வைரஸ் விஷயத்தில் உண்மைகளை மூடி மறைத்த சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம்WHO செயல்பட்டது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். கொரோனா பழியிலிருந்து சீனாவை காப்பாற்ற உலக நாடுகளை WH0 பலி கொடுத்துவிட்டது என்றும் சாடினார். WHOவின் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தை அமெரிக்கா வழங்கி வந்தது. அந்த நிதியை உடனடியாக நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார், அமெரிக்காவின் இந்த முடிவு, உலக சுகாதகார நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளை முடக்கி விடும் என பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனக் கணைகள் எழுந்தன. ஐரோப்பிய யூனியன் துவங்கி சீனா வரை ட்ரம்ப்பை திட்டித் தீர்த்தன. அமெரிக்காவில் கொரோனாவால் நடந்த பேரழிவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. WHOதான் காரணமென டரம்ப் பசப்பு வேலை செய்கிறார் என அமெரிக்க மீடியாக்கள் கூட சாடின. அமெரிக்க மீடியாக்களின் கூற்று ஒருவிதத்தில் சரிதான். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ட்ரம்ப் முதலில் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. மனித உயிர்களை விட பொருளாதாரத்தை பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தார். கையை மீறிப்போன பிறகுதான் கொரோனாவின் தீவிரத்தை புரிந்துகொண்டார். சீனா மீதும், WHO மீதும் குறை சொல்லி தான் நிரபராதி என காட்டிக் கொள்ள முனைந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement