LOGIN
dinamalar telegram
Advertisement

மற்றவர்கள் உடல் நிலை முன்னேற்றம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 90 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 30 பேர் 15 நாட்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். சிகிச்சையின் முன்னேற்றம் தெரிந்த இவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து 30 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 30 பேரில் 25 பேர் டில்லி சென்று வந்தவர்கள், 5 பேர் அவர்களின் உறவினர்கள். மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவர்கள் மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பிஸ்கட், பழங்களை கொடுத்து மருத்துவமனை நிர்வாகம் அனைவரையும் வீட்டிற்கு வழியனுப்பு வைத்தனர். கொரோனா பாதித்த நபர் பேசும் போது, மருத்துவக்குழு சிறப்பாக பார்த்துக்கொண்டதாகவும், அவர்கள் ஒத்துழைப்பால் தான் குணமடைந்தாகவும் கூறினார். மேலும் இருக்கும் சிகிச்சை பேரும் மற்றவர்கள் உடல்நிலையும் படிப்படியாக தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement