Advertisement

வியாபாரிகளுக்கு 50 லட்சம் நஷ்டம்

துாத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரை கிராம மீனவர்கள், ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே, கடலில் 25 நாட்கள் தங்கி, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றனர். இவர்களிடம் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலான சூரை, ஊழி மீன்களை பெற்ற தமிழக மொத்த வியாபாரிகள், கேரளாவிற்கு கொண்டு சென்றனர். கேரள மாநிலம் வாளையார் சோதனைச் சாவடியில் கேரளமாநில சுகாதாரத் துறையினர், வியாபாரிகளை தடுத்து நிறுத்தினர். தமிழகத்திற்கு திரும்பி போகவும் சொல்லாமல், மீன்களை பறிமுதல் செய்து, ஜே.சி.பி மூலம் குழி தோண்டி அனைத்தையும் மண்ணுக்குள் புதைத்தனர். இதனால் மீன் வியாபாரிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement