Advertisement

அரசு ஊழியருக்கு அரை சம்பளம்தான் தெலங்கானா அசத்தல்

ஊரடங்கு தொடர்பாக தெலங் கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. லாக்-டவுனால் அரசுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதார்கள், முதல்வர், எம்எல்ஏ, எம்எல்சிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல்வர், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் ஆகியோருக்கு 75 சதவீதம் ஊதியம் குறைக்கப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஏஐஎஸ் அதிகாரிகளுக்கு 60 சதவீதமும், மாநில அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமும் குறைக்கப்படுவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட்து. தெலுங்கானாவை போன்று தமிழக அரசும் முடிவு எடுக்குமா லாக்-டவுன் நடப்பதால் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாதென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா அரசின் இந்த முடிவு அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement