Advertisement

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏன்

டில்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் தப்லிகி ஜமாத்Tablighi Jamaat என்ற முஸ்லிம் அமைப்பின் மாநாடு இம்மாத மத்தியில் நடந்தது. இந்த மாநாட்டில் மலேசியா சவுதி அரேபியா கிர்கிஸ்தான் இந்தோனேஷியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த மதப் பிரச்சாரகர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்து 500 பேருக்கு மேல் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திருச்சி பெரம்பலூர் அரியலூர் ஈரோடு புதுக்கோட்டை நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது டில்லியில் உறுதி செய்யப்பட்டுள்ளது காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். இது தமிழக சுகாதார அதிகாரிகளை கலக்கமடைய வைத்துள்ளது. ஏனென்றால் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு தமிழகத்துக்கு திரும்பிய ஆயிரத்து 500 பேரால் நமது மாநிலத்திலும் வைரஸ் தீவிரமாக பரவக்கூடும் என்று அஞ்சுகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரிக்கத் துவங்கினர். ஆனால் அவர்களால் 820 பேரின் பெயர்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததுமாநாட்டில் கலந்துகொண்ட இன்னும் 700 பேர் யார் என்ற விவரம் தெரியாததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் கூடும் என்று அஞ்சப்படுகிறது டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தானாக முன்வந்து தங்களது விவரங்களை சுகாதாரத்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அததன்பிறகு தான் அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். அதன் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement