Advertisement

'கொரோனா'வால் மோதல்: ஒருவர் கொலை

ஊட்டி நகராட்சி சந்தையில் பாரம் தூக்கு தொழிலாளியாக பணியாற்றி வந்த ஜோதிமணி, அருகே உள்ள உணவகத்திற்கு சென்றார். அங்கு வந்த கேரளாவை சேர்ந்த தேவராஜ், நேற்றுதான் ஊரில் இருந்து வந்ததாக மெஸ் உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட ஜோதிமணி, கொரோனா வைரஸ் அச்சத்தில் சற்று தள்ளி நிற்கும்படி தேவராஜிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தேவராஜ் வெங்காயம் வெட்டும் கத்தியால் ஜோதிமணியின் கழுத்தில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த ஜோதிமணி உயிரிழந்தார். தேவராஜ்சை உதகை நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement