Advertisement

கமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்

திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி தாயார் கோயிலில் மார்ச் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கியது. ஆறாம் நாள் இரவு, சாய்ந்த கொண்டையணிந்து, கிளிமாலை, மார்பில் பதக்கம் சூட்டியவாறு, கமலவல்லி தாயார், வெள்ளிப் பல்லக்கில் வீதிஉலா வந்தார். பின்னர், கோயில் தீர்த்தக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பமானது 3முறை குளத்தில் வலம்வந்தது. இக்காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement