Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் மக்களுக்கு கைகழுவ பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடப்பது வழக்கம். திங்களன்று நூற்றுக்கணக்கான மக்கள் மனு அளிக்க திரண்டனர். அவர்களுக்கு கொரானா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கிருமி நாசினி திரவத்தை கொண்டு கைகளை எப்படி கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி, கலெக்டர் பொன்னையா செயல்முறை விளக்கமளித்தனர். இதையடுத்து, மக்கள் கிருமி நாசினி திரவத்தை கொண்டு கை கழுவிய பிறகு கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement