Advertisement

செக்யூரிட்டியை பார்த்து பயந்து ஓடிய டிரைவர்

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு பகுதிக்கு வந்த லோடு வேனை, செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தினர். அவரைப் பார்த்து, போலீஸ் என பயந்து போன, வேன் டிரைவர், வேனை நிறுத்திவிட்டு தப்பியோடினார். இதனால், அந்த வேனை வேறு ஒரு டிரைவர் மூலம் ஓட்டிச் சென்று பெல் போலீசாரிடம், செக்யூரிட்டிகள் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் போலீசார், வேனை ஆய்வு செய்தனர். அதில், 45 மூடைகளில் 135 பண்டல்கள் அடங்கிய கான்ஸ் பொருட்கள் இருந்தன. இதன் சந்தை மதிப்பு 13 லட்சத்து 50ஆயிரம். பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரையும், அதன் உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement