dinamalar telegram
Advertisement

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்தான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்து கொண்ட போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஸ்கேட்டிங் பேரணியில் சென்ற சிறுவர்-சிறுமியர் கையில் எடுத்துச் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement