dinamalar telegram
Advertisement

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

மதுரை ரவுண்ட் டேபிள் 14 சார்பில், கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கான கால்பந்து போட்டி, ஹாட்ரிக் அரியானா மைதானத்தில் நடைபெற்றது. இதில், மதுரையைச் சேர்ந்த 16 நிறுவனங்களின் அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில் நெக்ஸ்ட் ஜென் அணி, தங்கமயில் அணியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில், சுந்தர் டயர்ஸ் அணி, டுரியோ சிஸ்டம் அணியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் சுந்தர் டயர்ஸ் அணி 4 - 3 என்ற கோல் கணக்கில், நெக்ஸ்ட் ஜென் அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிக்கு, ரவுண்ட் டேபிள் 14 சேர்மன் ரகுராம், நிர்வாகிகள் விக்ரம், மற்றும் சிவா ஆகியோர் கோப்பையை வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement