Advertisement

தேசிய நாய்கள் கண்காட்சி

மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் தேசிய அளவிலான 34வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. தமிழகம் ஆந்திரா,கர்நாடகா,கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து 30 வகையான 225 நாய்கள் கலந்து கொண்டன. டூடுல், ஜெயின் பெர்னாட், ஆப்கான் ஹண்ட், ஜெர்மன் செப்பர்ட், டாபர் மேன் உள்ளிட்ட 20 வகையாக வெளிநாட்டு இன நாய்களும், ராமநாதபுரம் மந்தை, ராஜபாளையம், சிப்பிப்பாரை, கண்ணி,கோம்பை உள்ளிட்ட 10 நாட்டு இனநாய்களும் பங்கேற்றன. நாய்களின் உடல் கட்டமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சிறந்த 8 நாய்களுக்கு கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement