Advertisement

கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட்

கோவை, குனியமுத்துார், ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின், 2ம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், கல்லுாரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியை கல்லுாரியின் முதல்வர் பேபி சகிலா துவக்கி வைத்தார். முதல் போட்டியில், சி.ஐ.இ.டி., அணி, நேரு தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த நேரு கல்லுாரி அணி, 20 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 115 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சி.ஐ.இ.டி., அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 12.2 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 116 ரன் எடுத்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement