Advertisement

பெண்கள் பலு தூக்கும் போட்டி

காரைக்காலில் புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழிநுட்ப கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு, கலாச்சார போட்டிகள் நடைபெற்றது. இதில் பெண்கள் பலு தூக்கும் போட்டி காரைக்கால்மேடு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்,தாகூர் கலைக்கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட 6கல்லூரிகள், ஏனாம் சேர்ந்த டாக்டர்.எஸ்.ஆர்.கே கல்லூரி மற்றும் காரைக்கால் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். முதன்மை கல்வி அதிகாரி அல்லி போட்டியைத் துவக்கி வைத்தார். போட்டியில் முதல் 3இடங்கள் பெறும் மாணவிகளுக்கு காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement