Advertisement

மாநில அளவிலான 'செபக் தக்ரா' போட்டி

கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி உடற்கல்வித்துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மற்றும் கிளப் அணிகளுக்கு இடையேயான மாநில அளவிலான செபக்தக்ரா போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. சனியன்று நடந்த கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில், சென்னை அணி கல்லுாரி அணி, பி.எஸ்.ஜி., முன்னாள் மாணவர்கள் அணியை, 3-0 என்ற செட் கணக்கில் வென்றது. திருநெல்வேலி அணி, 3-0 என்ற செட் கணக்கில், ஜெயேந்திரா அணியை வீழ்த்தியது. டி.எ.சி.டி., அணி, 3-0 என்ற செட் கணக்கில், கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியை வென்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement