Advertisement

இந்தியா,பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள்

டெல்லியில் பிரதமர் மோடியும், பிரேசில் அதிபர் போல்சனரோவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபின்னர், இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ Jair Bolsonaro பங்கேற்கிறார். இதற்காக அவர் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் பிரேசில் அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரேசில் அதிபர் போல்சனரோ, பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது சுகாதாரம், சைபர் பாதுகாப்பு, பயோ எனர்ஜி உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக மோடி தெரிவித்ததார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement