Advertisement

ரஜினியை மிரட்டுகிறார்களா? ராஜேந்திரபாலாஜி கொதிப்பு

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய கட்டுமானத்திற்கான பூமிபூஜையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ரஜினிகாந்த், ஈ.வெ.ராவை அவமரியாதையாக பேசவில்லை. ரஜினியை மிரட்டி பார்க்கிறார்களா திகவினர். ரஜினியின் ரசிகர்கள் இந்த பிரச்னையில் பொறுமை காப்பது எனக்கு சங்கடமாக உள்ளது என்றார். ஆன்மிகவாதிகளை பழிதீர்க்கும் செயலை, திகவினர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் எனவும் சாடினார். மேலும், ரஜினிகாந்த் நியாயவாதி. நல்ல மனிதர்; மனதில் பட்டதை பேசுபவர். ரஜினி பேசிய நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் . திமுகவின் முகமூடியாக தான் திக திகழ்கிறது. ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அவர், தமிழச்சியை திருமணம் செய்தவர் என்றார். பொறுமையாக இருக்கும் இந்துக்களை தி.க மற்றும் தி.மு.கவினர் இளிச்சவாயன்களா பார்க்கிறார்களா எனவும் கேள்வியெழுப்பினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement