Advertisement

தி.மு.க.வை காப்பாற்றும் அமைச்சர்! பிஜேபி ஷாக்

ரஜினி சொன்னது போல 1971 ல் சேலத்தில் இந்து கடவுளை செருப்பால் அடிச்ச சம்பவமே நடக்கலை..னு அமைச்சர் ஜெயகுமார் சொல்றார். அமைச்சரோட இந்த பேச்சு அதிமுக வட்டாரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு. ரஜினி பேச்சோட உட்கருத்து என்னன்னா, இந்து கடவுள அவமதிக்கிறதுக்கு கருணாநிதி அரசாங்கமே துணை போச்சு.. அப்டீங்றதுதான். திமுகவோட பாரம்பரியமான இந்து விரோத போக்கை அம்பலப்படுத்தின ரஜினிகாந்த திமுக அட்டாக் பண்ணா அதுல நியாயம் இருக்கு. அனாவசியமா ஒரு அதிமுக மினிஸ்டர் எதுக்காக திமுகவுக்கு வக்காலத்து வாங்கணும்?னு அதிமுக தொண்டர்கள் கேக்குறாங்க. அதுகூட ஏதாவது ஆதாரத்த காட்டி அமைச்சர் பேசினாக்கூட பரவால்ல; எந்த ஆதாரமும் இல்லாம, ”சேலத்ல அப்டி ஒரு சம்பவமே நடக்கலை..”னு அபாண்டமா சொல்லிருக்காரு ஜெயகுமார்..னு அதிமுகவோட தோழமை கட்சியான பிஜேபியிலயும் புகைச்சல் கிளம்பிருக்கு. இன்னிக்கு வந்திருக்ற இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைல சேலத்துல அப்டி சம்பவமே நடக்கலைனு தலையங்கம் எழுதிருக்றதா அமைச்சர் சொல்றாரு. அப்படி எக்ஸ்பிரஸ்ல ஒரு தலையங்கம் வரவே இல்ல. குட்டி செய்தியாக்கூட அத பத்தி எந்த தகவலும் இல்ல. அமைச்சர் ஜெயகுமாருக்காக இண்டியன் எக்ஸ்பிரஸ் ஸ்பெசல் எடிசன் அடிச்சு அனுப்றாங்களானு தெரியல. இண்டியன் எக்ஸ்பிரஸ் குழுமத்த சேந்த தினமணி பத்திரிகைல சேலம் சம்பவம் பத்தி அப்பவே தெளிவா செய்தி போட்டிருக்காங்க.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement