Advertisement

மாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே 30 ஆண்டாக நீடித்த உள்நாட்டுப் போர் 2009-ல் முடிவுக்கு வந்தது. 1 லட்சம் பேர் இறந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மாயமாயினர். 'மாயமானவர்களின் நிலை என்ன? என கேட்டு குடும்பத்தினரும் மனித உரிமை அமைப்பினரும் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில், கொழும்பில், இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவை ஐ.நா., பிரதிநிதி ஹானா சிங்கர் சந்தித்து பேசினார். அப்போது, மாயமான 20,000 பேரும் உயிரிழந்து விட்டதாக, ஹானா சிங்கரிடம் கோத்தபயா கூறினார். 20,000 பேருக்கான இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் மாளிகை தெரிவித்தது. இலங்கை உள்நாட்டுப்போரில் மாயமான 20,000 பேரும் இறந்து விட்டதாக இலங்கை அதிபர் ஒப்புக்கொள்வது
இதுதான் முதல் முறை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement