Advertisement

சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

வரிப்பணத்தில் சிறுபான்மையினருக்கு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு, இந்துக்களை வஞ்சிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த Sanatan Vedic Dharam சனாதன் வேதிக் தரம் என்ற இந்து அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தனர். Sanatan Vedic Dharam வழக்கு நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் ஆஜராகி வாதாடினார். நீதிபதி நாரிமன் அமர்வு 2019-2020ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட மத சிறுபான்மையினருக்கு பலனளிக்கும் நலத்திட்டங்களை அமல்படுத்த 4,700 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பொது பட்ஜெட்டில் ரூ. 4,700 கோடி ஒதுக்கீடு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் சலுகை அளிக்கும் நோக்குடன் சட்டங்களோ அல்லது திட்டங்களோ கொண்டு வருவது பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்படாதபோதும் சிறுபான்மையினருக்கு மிதமிஞ்சிய சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement