Advertisement

பி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் படத் திறப்பு விழா நெல்லை மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான கோவிந்தபேரியில் நடந்தது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பி.எச் பாண்டியன் படத்தை திறந்துவைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சட்டசபையில் சபாநாயகர் தீர்ப்பு தான் அதிகாரம் படைத்தது என நிலைநாட்டியவர் பி.எச் பாண்டியன். அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் செல்ல இருந்தபோது அதனை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது பி.எச்.பாண்டியன்தான்;அவருக்கு அதிமுக சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும்என்று ஓ.பி.எஸ். பேசினார். விழாவில் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement