Advertisement

விஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி ?

சமூக வலைத்தளத்தில் திடீரென விஜய் ரசிகர்கள் 'வசூல் மன்னன் விஜய்' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். ரஜினி நடித்து வெளிவந்த 'தர்பார்' படம் தமிழ்நாட்டில் 10 நாளில் பெற்ற 100 கோடி வசூலை விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' படம் 3 நாளில் பெற்றது. இது பற்றி கோலிவுட்டில் விசாரித்த போது, கடந்த வருடம் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் வசூலுடன் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தின் வசூல் போட்டி போட முடியவில்லை. எல்லா தளங்களிலும் 'விஸ்வாசம்' வசூலை அள்ளியது. அது போல, 'பிகில்' படத்தின் வசூலையும் 'தர்பார்' படத்தால் நெருங்க முடியவில்லை. அஜித், விஜய் ஆகியோரது வசூல் கணக்கு ரஜினியின் வசூல் கணக்கை விட அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள். அதனால், ரஜினிக்குரிய பாக்ஸ் ஆபீஸ் இடம் தற்போது மாற ஆரம்பித்துவிட்டதே உண்மை என்று சொல்கிறார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement