Advertisement

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்

மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. 660 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. 695 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோரின் காளைகள் பிடிபடாமல், வீரர்களிடம் விளையாட்டு காட்டின. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமமுக கட்சி தலைவர் தினகரன் காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. அலங்காநல்லுாரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் 16 காளைகளை அடக்கி முதல்வர் பழனிசாமி வழங்கும் சான்ட்ரோ காரை பரிசாக வென்றார். கடைசி சுற்றில் களமிறங்கிய அவர், ஒரு மணி நேரத்தில் 16 காளைகளை அடக்கி அசத்தினார். அழகர்கோவிலைச் சேர்ந்த கார்த்திக் 14 காளைகளை அடக்கி இரண்டாமிடம் பிடித்து இருசக்கர வாகனத்தை வென்றார். அரிட்டாபட்டியைச் சேர்ந்த கணேசன், 13 காளைகளை அடக்கி, மூன்றாமிடம் பிடித்து பத்தாயிரம் ரூபாய் பரிசை பெற்றார். களத்தில் நின்று, வீரர்களை பந்தாடிய குலமங்கலத்தைச் சேர்ந்த மாரநாடு என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வாகி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின், சான்ட்ரோ காரை பரிசாக வென்றது. 7 லட்ச ரூபாய் மதிப்பிலான நான்கு காங்கேயம் பசுக்களும் பரிசளிக்கப்பட்டது. புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை 2ம் பரிசும், ஜல்லிகட்டு இளைஞர் பேரவை நிர்வாகி கார்த்திக்கின் காளை மூன்றாம் பரிசும் வென்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement