Advertisement

ஸ்டாலின் CM ஆவதை தடுக்கும் திமுகவினர்; காங். தாக்கு

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக மீறியதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டது, திமுக- காங்கிரஸ் கூட்டணியில் புயலை கிளப்பியது. திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், "திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் எங்களுக்கு நஷ்டம் இல்லை; ஏனென்றால் காங்கிரசுக்கு ஓட்டே இல்லை" என்றார். துரைமுருகனின் கருத்து தங்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். ''துரைமுருகனுக்கு இப்போது வந்துள்ள ஞானோதயம் வேலூர் லோக்சபா இடைத்தேர்தலுக்கு முன் ஏன் வரவில்லை?" என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பினார். வேலூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று துரைமுருகன் மகன் கதிர் எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement