Advertisement

மணல் தகராறு: ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

திருச்சி, முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவி ஜான்சிதிவ்யா, திருமலைசமுத்திரம் குளத்தில் இருந்து ரிங் ரோட்டிற்கு கலெக்டர் அனுமதியுடன் மணல் எடுத்துள்ளார். அப்போது, அ.தி.மு.க வை சேர்ந்த மூக்கன் உள்ளிட்ட சிலர் லாரியை மறித்து பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதை தட்டி கேட்ட ஜான்சி மற்றும் அவரது கணவர் சகாயராஜ் ஆகியோரை மூக்கன் மற்றும் ஆதரவார்கள் தாக்கியதாக தெரிகிறது. தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜான்சி திவ்யா தமது கணவருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே பூட்டி கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஊர்மக்களும் இவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement