dinamalar telegram
Advertisement

ஜல்லிக்கட்டுக்கு காளைகள் பதிவு தயாராகிறது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. 16ம் தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான கால்கோள் விழா உற்சாகத்துடன் நடைபெற்றது. வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் வாசலில் மாவட்ட கலெக்டர் வினய், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்று பந்தக்கால் நட்டு வைத்தனர். இதையொட்டி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவு நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் காளைகளின் உடற் தகுதியை ஆய்வு செய்து பதிவு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement