dinamalar telegram
Advertisement

மறைமுக தேர்தல் : வீடியோ பதிவு உறுதி

ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடம், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடம், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜன.,11 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த லலிதா என்பவர் ஐகோர்ட் 
மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது பதிலளிக்க தமிழக தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் உறுதி அளித்தது. இதனை ஏற்ற ஐகோர்ட் கிளை, வீடியோ பதிவு தொடர்பாக, தேர்தல் கமிஷன் தரப்பில், ஜன.,21 ல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement