dinamalar telegram
Advertisement

பெட்ரோல் 'பங்க்'ல் ஆபாச வீடியோ பதிவு

கோவை, கண்ணப்பநகரை சேர்ந்த மணிகண்டனும், அவரது மனைவி சபிதாவும் சாய்பாபாகாலனி அருகேயுள்ள, ரூட்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவந்தனர். இந்நிலையில், அந்நிறுவன அதிகாரிகள் தாக்கியதாக கூறி, கோவை அரசு மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, நான்கு மாதங்களுக்கு முன்பு, பெட்ரோல் பங்கில் சூபர்வைசராக இருந்த சுபாஷ், பெண்கள் உடைமாற்றும் அறையில், ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்ததாகவும், அது தொடர்பாக, நிர்வாகத்திடம் புகார் அளித்ததால், பணியில் இருந்து சுபாஷ் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சுபாஷ் மீது புகார் அளித்ததால், பழிவாங்கும் நோக்கில் நிர்வாக அதிகாரிகள், தம்மை பெட்ரோல் திருட வைத்து அதை வீடியோ எடுத்து மிரட்டி, தாக்கியதாகவும் மணிகண்டன் புகார் கூறியுள்ளார். ஆபாச வீடியோ தொடர்பாக, போலீசாருக்கு புகார் சென்றும், நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement