Advertisement

வீடுகளுக்கு நோட்டீஸ் அதிர்ச்சியில் மக்கள்

ராசிபுரம் அடுத்த களரம்பள்ளி கிராம அரசு புறம்போக்கு நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். அந்த வீடுகளை காலி செய்ய வேண்டுமென பொதுப்பணிதுறை நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் இங்கு குடியிருப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 50 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள், மின்சாரம், குடிநீர் இணைப்பு, ரேஷன் மற்றும் ஆதார் அட்டை என அனைத்தும் பெற்றிருப்பதாகவும், பல ஆண்டுகளாக பட்டா கேட்டு வருவதாகவும் கூறுகின்றனர். கூலி வேலை செய்யும் தங்களுக்கு அரசுதான் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement