Advertisement

ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரத்திற்கு 200 அடி மாலை

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு திங்கட்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது. இதையொட்டி, 236 அடி உயரம் கொண்ட கோயிலின் ராஜ கோபுரத்திற்கு 200 அடி உயரமுள்ள இரண்டு மாலைகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த மாலைகள் ஒரு டன் பூக்களை கொண்டு 30 பேர் இரண்டு நாட்களில் தயாரித்துள்ளனர். இதே போல், தாயாரின் சன்னதிக்கு அருகில் இருக்கும் வடக்கு கோபுரத்திலும் நீண்ட மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் மாலை அணிவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement