dinamalar telegram
Advertisement

கள்ள ஓட்டு பதிவு: முதல்முறையாக வாக்களிக்க வந்த இளைஞர் ஏமாற்றம்

கிருஷ்ணகிரி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த போஸ்நாதன். உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க சென்றார். ஆனால், அவரது பெயரில் ஏற்கனவே கள்ளஓட்டு பதிவாகியிருந்தது. அதிகாரிகளிடம் ஆதரங்களை காட்டி முறையிட்டபோதும், ஓட்டளிக்க அனுமதிக்கவில்லை. இதனால், அவர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். இதனிடையே, ஊத்தங்கரை ஒன்றியம் 21வது வார்டில் நடந்த தேர்தலில் அதிமுக பிரமுகர் ஆறுமுகம் கள்ளஓட்டுபோட முயன்றதாக வாக்காளர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது அங்கு வந்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ., மனோரஞ்சிதத்தை வாக்காளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement