Advertisement

காஞ்சி கோயிலில் மகா சண்டி யாகம்

காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் நல சங்கம் சார்பில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் ஞாயிறு காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் முன்னிலையில் 2 மணி நேரம் யாகம் நடைபெற்றது. வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு யாக பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டார். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் தெலுங்கு பேசும் செட்டியார் இனத்தவர்கள் 2000க்கும் மேற்பட்டோர் யாகத்தில் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement