Advertisement

பிரியங்காவை தாக்கவில்லை; பெண் போலீஸ் விளக்கம்

த்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி Darapuri கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா சனியன்று சென்றார். அவர் காரை லக்னோ போலீசார் தடுத்தனர். உடனே காங்கிரஸ் பிரமுகரின் ஸ்கூட்டரின் பின்னால் உட்கார்ந்து எஸ்கேப் ஆனார். போலீசார் விரட்டிச் சென்று ஸ்கூட்டரை மடக்கியதும் விறுவிறுவென நடந்து சென்று தாராபுரி குடும்பத்தை சந்தித்தார். ''போலீசார் என் கழுத்தைப் பிடித்துத்தள்ளினர்; தாக்கினர்'' என பிரியங்கா கூறினார். பிரியங்கா குற்றச்சாட்டுகளில் கொஞ்சம்கூட உண்மை இல்லை என போலீஸ் அதிகாரி அர்ச்சனா சிங் மறுத்தார். அவர்தான் லக்னோ வந்த பிரியங்காவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி. ''ஏற்கனவே திட்டமிட்டிருந்த வழியில் செல்லாமல் வேறுதிசையில் பிரியங்கா கார் சென்றது; அதுபற்றி கேட்டபோது பிரியங்கா தரப்பிலிருந்து முறையான பதில் வரவில்லை. காரை விட்டு இறங்கி நடக்கத் துவங்கி விட்டார்; கடமையைச் செய்ததற்காக என் மீது பழிபோடுகிறார்கள்'' என்று, போலீஸ் அதிகாரி அர்ச்சனா கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement