Advertisement

மக்கள் சேவையே மனத்திருப்தி!

கோவை, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரஜினி தேவராஜ். தீவிர ரஜினி ரசிகர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, தனது பேரனுடன் வந்திருந்த இவர், கோவை அரசு மருத்துவமனை அருகே சாலையோரங்களில் தஞ்சமடைந்திருக்கும் ஆதரவற்றோருக்கு முடி திருத்தம் செய்து, அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார். 40 ஆண்டுகளாக முடிவெட்டும் தொழில் செய்துவரும் தேவராஜ், 25 ஆண்டுகளாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுபோன்று, ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்து, அவர்களுக்கு உதவிகள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். பிறருக்கு உதவும் எண்ணம் தம் பேரக்குழந்தைகளுக்கும் வரவேண்டும் என்பதற்காக அவர்களையும் இதில் ஈடுபடுத்தி வருகிறார். ஓடி ஓடி உழைத்து எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், ஆதரவற்றவர்களுக்கு செய்யும் இந்த சேவைதான் தமக்கு உண்மையான மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருவதாக கூறி அதிசயிக்க வைக்கிறார் தேவராஜ்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement