Advertisement

நிதிநிறுவன ஊழியர் வெட்டிக்கொலை

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் நிதிநிறுவனத்தில் சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த சண்முகம் கடன் வசூல் பிரதிநிதியாக வேலைபார்த்து வந்தார். வெள்ளியன்று இரவு நிதி நிறுவனத்திற்குள் புகுந்த நான்கு பேர், சண்முகத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். ரத்தம் பீரிட்டு சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், சபரிசித்தார்த், ராஜசேகர், வேலவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், கார்த்திகேயனின் மனைவியுடன் பைனான்ஸ் ஊழியர் சண்முகம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதத்தால், இந்தகொலை நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement