dinamalar telegram
Advertisement

நகைகடை அதிபர் வீட்டில் 300 பவுன் நகை கொள்ளை

சேலத்தில், குருங்குச்சாவடி, சொர்ணபுரி ஆகிய இடங்களில் சீனிவாசன் என்பவர் நகைகடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீபாஷ்யம், குரங்குச்சாவடியில் வசித்து வருகிறார். நள்ளிரவில் இவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த 2 மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த லாக்கரை திறந்து, அதிலிருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். லாக்கரின் சாவி அதிலேயே இருந்ததாலும், அலாரமும் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்ததாலும், கொள்ளையர்களுக்கு வசதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த காவலரையும் கொள்ளையர்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாகவும் தெரிகிறது. கொள்ளை தொடர்பாக போலீசார்நடத்திய முதற்கட்ட விசாரணையில் 300 பவுன் தங்க நகைகள், ஆறரை லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துவரும் போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement