Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 12-12-2019 | Sports Roundup | Dinamalar

'ஸ்பெஷல்' வெற்றி மும்பையில் நடந்த மூன்றாவது 'டுவென்டி-20' லீக் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீசை வீழ்த்தியது. இதன் மூலம், தொடரை 2-1 என வென்று கோப்பையை வசப்படுத்தியது. இது குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறுகையில்,'' சக வீரர் லோகேஷ் ராகுலிடம் கடைசி வரை அவுட்டாகாமல் இருக்குமாறு கூறினேன், என்னால் முடிந்த அளவு விளாசினேன். எனது திருமண நாளில் கிடைத்த வெற்றி ஸ்பெஷலானது,'' என்றார். ............... சிந்து தோல்வி சீனாவின் குவாங்சு நகரில் வேர்ல்டூ டூர் பைனல்ஸ் பாட்மின்டன் நடக்கிறது. இதன் முதல் லீக் போட்டியில் சிந்து, ஜப்பானின் அகானாவை எதிர் கொண்டார். முதல் செட்டை 21-18 என கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டை 18-21 என இழந்தார். தொடர்ந்து ஏமாற்றிய இவர், மூன்றாவது செட்டையும் 8-21 என பறிகொடுத்தார். முடிவில் சிந்து 21-18, 18-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். ............. சென்னை போட்டி ஒத்திவைப்பு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடக்கிறது. டிசம்பர் 12ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்க இருந்த போட்டியில் சென்னை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோத இருந்தன. ஆனால், குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் சென்னை அணி போட்டி ஒத்திவைக்கப்பட்டது. ............ சிறந்த வீராங்கனை ஆஷ்லே பார்டி ஆஸ்திரேலிய டென்னிஸ் நட்சத்திரம் ஆஷ்லே பார்டி. நடப்பு ஆண்டில் பிரெஞ்ச் ஓபனில் அசத்திய இவர், முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் கோப்பை வென்றார். வேர்ல்டூ டூர் பைனல்ஸ் தொடரிலும் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். 'நம்பர்-1' வீராங்கனையான இவர், இந்த ஆண்டுக்கான டபிள்யு.டி.ஏ., சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement