Advertisement

சிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் சார்பில், முத்தமிழ் முகாமிற்கு புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13ம் தேதி வரை நடக்க உள்ள இந்த முகாமில், சிங்கப்பூரை சேர்ந்த 15 தமிழாசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். முகாமின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக உரையரங்கம் நடந்தது. இதில், 'தமிழ்மொழி கற்றல்- கற்பித்தலில் தமிழ் இலக்கியம்' என்ற தலைப்பில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பதிவாளர் முகிலை ராஜபாண்டியன் உரையாற்றினார். 'இருமொழிக் கல்வி - புதுச்சேரி அனுபவம்' என்ற தலைப்பில் புதுச்சேரி அரசு சட்டத் துறையின் முதன்மை மொழிப்பெயர்ப்பாளர் சுந்தர முருகன் பேசினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement