Advertisement

மனைவிக்கு அவதூறு நண்பன் குத்தி கொலை

நாசரும் அலிசாரும் ராயப்பேட்டை வாசிங்க. ரொம்ப வருஷ பழக்கம். இணை பிரியாத நண்பர்கள்னு சொல்லலாம். நாசருக்கு பொண்ணு பாக்க ஆரமிச்சாங்க அவங்க குடும்பத்து ஆளுங்க. எத்தனையோ பாத்தும் எதும் செட் ஆவல. நண்பனோட நிலைமை பாத்து அலிசாருக்கு ரொம்ப வருத்தம். அப்பதான் அலிசாரோட சொந்தத்லயே ஒரு பொண்ணுக்கு மாப்ள தேடுற தகவல் தெரிஞ்சுது. உடனே நாசர்கிட்ட சொன்னார் அலிசார். அவங்க வீட்ல உள்ளவங்க போய் பாத்தாங்க. பொண்ண ரொம்ப புடிச்சு போச்சு. கல்யாணம் பேசி முடிச்சாங்க. நண்பர்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஆனா தம்பதிங்க மகிழ்ச்சி நீடிக்கல. கல்யாணம் ஆனதுல இருந்தே நாசருக்கும் மனைவிக்கும் சின்ன சின்ன விசயங்கள்ல அடிக்கடி சண்ட வர ஆரமிச்சுது. கொஞ்சநாள்ல அது டிவோர்ஸ்ல முடிஞ்சிது. மனைவி மேல இருந்த கோபம் நண்பன் மேல திரும்புச்சு. நீ சொல்லிதான அவள கல்யாணம் பண்ணேன்..னு சொல்லி சொல்லி காட்னதால நண்பர்களுக்குள்ள சண்ட. நல்லதுதானடா செஞ்சேன்..னு அலிசார் சொல்ல அவளோட குணம் தெரிஞ்சே என்கிட்ட சொல்லாம ஏமாத்திட்டியேடா..னு நாசர் சொல்ல நெருக்கமான நட்பு அடியோட முறிஞ்சுது. சவுதில வேலை கிடைச்சதுனு அலிசார் கிளம்பி அங்க போய்ட்டாரு. நாசருக்கு ஆத்திரம் அடங்கவே இல்ல. உன்னோட வீட்டுக்காரந்தான் என்னோட லைஃப கெடுத்தான்..னு அலிசார் மனைவிகிட்ட சண்ட போட ஆரமிச்சாரு நாசர். நண்பன பழி வாங்றதா நெனச்சுகிட்டு அலிசார் மனைவிய பத்தி அக்கம் பக்கத்து வீட்டுகாரங்க கிட்டயும் ஒரு மாதிரி சொல்லிகிட்டு இருந்தாராம். இந்த விசயம் சவுதில இருந்த அலிசார் காதுக்கு போச்சு. கோபம் வந்தாலும், சரி.. நம்ம நண்பனா இருந்தவன்.. மனைவிய இழந்த சோகத்ல ஏதோ தப்பா பேசுறான்.. நேர்ல பாத்து பேசினா சரி ஆய்ரும்..னு நெனச்சார் அலிசார். சவுதில இருந்து கிளம்பி வந்தாரு. நேரா நாசர போய் பாத்தாரு. ஏன் நண்பா இப்டிலாம் பண்ற..னு சமாதான பேச்ச ஆரமிச்சிருக்காரு. நாசர் கேக்ற மூட்ல இல்ல.. உம் பொஞ்சாதிய பத்தி பேசினதும் பஞ்சாயத்துக்கு வந்துட்டியா.. அவள பத்தி எல்லாம் எனக்கு தெரியும்; உனக்குதான் தெரியாது..னு சொல்லி நாசர் முன்னாடியே அவர் மனைவிய தப்பா பேசுனார் . அலிசார் தலைக்கு ஏறிடுச்சு கோபம். சர்ருனு வீட்டுக்கு போய் கத்திய எடுத்துட்டு வந்து நாசர் நெஞ்சுல சொருகிட்டாரு. ஹாஸ்பிடல்க்கு கொண்டு போற வழிலயே நாசர் இறந்துட்டாரு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement