Advertisement

டெல்லி பேப்பர் ஆலையில் தீ 43 பேர் மரணம்

டெல்லியில் வீடுகள் நிறைந்த பகுதியில் செயல்பட்ட பேப்பர் ஃபேக்டரியில் பயங்கர தீ பிடித்தது. 43 பேர் கருகி இறந்தனர். 20 மேற்பட்டோர் கவலைக்கிடமாக நிலையில் உள்ளனர். 50 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் இந்த ஆலை இயங்கி வந்தது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ பிடித்ததாக அதிகாலை 5.22 மணிக்கு தகவல் வந்தது. உடனே 50 க்கு மேலான தீயணைப்பு வண்டிகள் அந்த இடத்துக்கு விரைந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்தது. ஆனால், பேப்பர் ஆலை என்பதால் தீ வேகமாக பரவி எரிந்து முடிந்து விட்டது. தீயில் சிக்கி இறந்தவர்கள் குறைவு. பயங்கர வெப்பத்தில் கண் திறந்து பார்க்க முடியாததால் எந்த திசையில் ஓடி தப்பிக்க முடியும் என்பது தெரியாமல் புகையை சுவாசித்து இறந்தவர்கள் அதிகம்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement