Advertisement

வருமான வரி குறையுமா? குறையாதா?

சரியும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என பேச்சு அடிபடுகிறது. இது குறித்து கேட்டபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வருமான வரி விகிதம் மாறுமா என்று கேட்கிறீர்கள். ஆமாம் என்று நான் சொன்னால் எப்போது என்று கேட்பீர்கள். 
பட்ஜெட்தான் வரப் போகிறதே, இப்போது ஏன் அறிவித்தீர்கள் என்று கேட்பீர்கள். அதனால், ஆமாம் என்று சொல்ல நினைத்தாலும் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அதே சமயம், உங்கள் கேள்விக்கு இல்லை என்றும் பதில் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அது குறித்து ஆய்வு செய்கிறோம். நேரடி வரி முறையில் கணக்குகளை சரி பார்ப்பது யார் என்பது தெரியாது. மறைமுக வரி முறையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம். இவ்வாறு நிர்மலா கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement