Advertisement

கட் அடிக்கும் எம்.பி.களுக்கு செக் போஸ்ட்

பார்லிமென்ட் நடவடிக்கைகளில் எம்.பி.,க்கள் பங்கேற்பது குறைந்துவிட்டது என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும் வருத்தப்படுகின்றனர். 
பா.ஜ., - எம்.பி.,க்கள் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை என பிரதமர் மோடி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அவரே சொல்லியும் சில பா.ஜ.,- எம்.பி.க்கள் கண்டு கொள்ளவில்லை. பதிவேட்டில் கையெழுத்து போட்டு, போய்விடுகின்றனர். இது சம்பந்தமாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மோடி அழைத்து பேசினார். 'சபைக்கு கட் அடிக்கும் எம்.பி.,க்களை எச்சரியுங்கள்' என சொல்லியிருக்கிறார். எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள சபாநாயகர் ஓம் பிர்லா, ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

ஒவ்வொரு, எம்.பி.,யும் சபையில் தினமும் எத்தனை கேள்விகள் கேட்டனர்; விவாதத்தில் கலந்து கொண்டாரா, என்ன பேசினார் என்பதை லோக்சபா இணையதளத்தில் பதிவிட உத்தரவிட்டுள்ளார். இதனால், தங்கள் தொகுதி எம்.பி.,க்கள் என்ன செய்தனர் என்பதை, ஓட்டு போட்ட மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement