Advertisement

அணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூலம் விவசாயம் மற்றும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்ட நிலையில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் விழானன்று 100 அடியை தாண்டியது. தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, அடவிநயினார், குண்டாறு, கருப்பாநதி அணைகளும் நிரம்பிவருகின்றன. இரு மாவட்டங்களிலும் அணைகள் நிரம்பியதோடு தொடர்ந்து மழை பெய்துவருவதால் பிசான பருவ நெல் சாகுபடி, கிழங்குவகைகள் உற்பத்தி என விவசாயிகள் வேளாண்மை பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement